திண்டுக்கல் அருகே கனமழையால் இடிந்து விழுந்த குடிநீர்த் தொட்டி! சிசிடிவி காட்சி வைரல்

 
திண்டுக்கல்

 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர்த் தொட்டி இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலியூர்நத்தம் கிராமத்தில் கனமழை காரணமாகப் பழுதடைந்த நிலையில் இருந்த குடிநீர்த் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

தொட்டி இடிந்து விழுந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குடிநீர்த் தொட்டி இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்ற கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.