சபரிமலை பம்பையிலிருந்து மதுரை திருச்சி வழியே சென்னைக்கு நேரடி பேருந்து... ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு!

 
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். சபரிமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு வகையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை கோவில் நிர்வாகமும் மாநில அரசும் இணைந்து நடத்தியுள்ளன.  

சபரிமலை

சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நவம்பர் 15 முதல் ஜனவரி 16ம் தேதி வரை சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூரில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள், இருக்கை, படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி இல்லாத சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்ட தமிழக அரசின் சிறப்பு பேருந்து முதல்முறையாக கிளாம்பாக்கம் வந்தடைந்தது.   

சபரிமலை

நவம்பர் 15ம் தேதி முதல் கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து பம்பைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் பம்பையில் இருந்து இயக்கப்பட்ட முதல் தமிழக அரசு சிறப்பு பேருந்து இன்று கிளாம்பாக்கம் வந்து சேர்ந்துள்ளது. பேருந்தில் பயணித்த பக்தர்கள் நிலக்கல் செல்லாமல், நேரடியாக பம்பையில் இருந்து கிளம்புவது வசதியாக இருப்பதாக பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web