ஹேப்பி நியூஸ்... மே 1 முதல் பெங்களூரு, ஹைதராபாத்திற்கு நேரடி விமான சேவை!

 
இண்டிகோ இண்டிகோ

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான புதுச்சேரியில் இருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்குப் பயணிக்க இனி கவலைப்படத் தேவையில்லை. வரும் மே 1 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்குக் கூடுதல் விமான சேவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இண்டிகோ

இந்தத் திட்டத்தின்படி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினசரி இருவழிப் பயணமாக தலா ஒரு விமான சேவை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு தேவைகளுக்காக அண்டை மாநிலங்களுக்குச் செல்பவர்கள் மிகக் குறைந்த நேரத்தில் தங்களது பயணத்தை முடிக்க முடியும். குறிப்பாக வார இறுதி நாட்களில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதனால் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டிகோ

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் புதுச்சேரி விமான நிலையம் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்கான முன்பதிவுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பயணிகள் தங்களது பயணத்தைத் திட்டமிட இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. பெங்களூரு, ஹைதராபாத் போன்ற தொழில்நுட்ப நகரங்களுடன் நேரடித் தொடர்பு ஏற்படுவதால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சியும் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என வர்த்தகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.