வாழ்த்துக்கள்... இயக்குநர் அஜய் ஞானமுத்து காதலியை கரம் பிடித்தார்!

 
அஜய் ஞானமுத்து

 தமிழ் திரையுலகில் 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான ஹாரர் திரில்லர் கதை 'டிமான்ட்டி காலனி'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருந்த நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 8 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு  'டிமான்ட்டி காலனி 2' கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது.

அஜய் ஞானமுத்து

அதன்பிறகு நயன்தாரா, விஜய் சேதுபதி, அனுராக், அதர்வா என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன்   'இமைக்கா நொடிகள்' படத்தை இயக்கின்றார். இந்த படமும் ஹிட்டடித்த நிலையில்  விக்ரம் உடன் இணைந்து, 'கோப்ரா' படத்தினை எடுத்தார். இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் கடும் தோல்வியைச் சந்தித்தது. தற்போது 'டிமான்ட்டி காலனி 3' படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.  

அஜய் ஞானமுத்து

இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தனது காதலியை பெற்றோர்களில் சம்மதத்துடன் கரம் பிடித்துள்ளார். இது குறித்த  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web