சென்னையில் பரபரப்பு... போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

 
ameer ameer
 

ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஏற்கெனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய கூட்டாளி சதா என்பவரையும் கைது செய்தனர்.

அமீர்

 ஜாபர் சாதிக்கின் வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில், பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஜாபர் சாதிக் கூட்டாளியாக கொண்டு அமீர் திரைப்படங்களை தயாரித்து, இயக்கி வந்த நிலையில், இயக்குநர் அமீருக்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சம்மன்  அனுப்பி அவரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை

இந்நிலையில், இன்று அதிகாலை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் இயக்குநர் அமீர் வீடு மற்றும் அலுவலகத்திலும், ஜாபர் சாதிக்கின் நண்பர் புகாரி தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்