இயக்குநர் லிங்குசாமி வீட்டில் சோகம்... திரையுலகினர் இரங்கல்!

 
கேசவன்


 தமிழ் திரையுலகில் முண்ணனி இயக்குநர்களில் ஒருவர் லிங்குசாமி. இவருடைய  மூத்த சகோதரர் கேசவன் மாரடைப்பு காரணமாக இன்று காலை சென்னையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவருக்கு வயது 60. இயக்குநர் லிங்குசாமி 'ஆனந்தம்', `ரன்', 'பையா', 'தி வாரியர்' உட்பட பல வெற்றிப் படங்களை  இயக்கியவர்.  அத்துடன்  வழக்கு எண் 18/9, கமலின் 'உத்தம வில்லன்'  போன்ற சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

லிங்குசாமி

இயக்குநர்  லிங்குசாமிக்கு ராதாகிருஷ்ணன், கேசவன் என இரண்டு அண்ணன்கள்.  தம்பி சுபாஷ் சந்திரபோஸ். இவர்கள்  மொத்தம் 4 பேர். இவர்களுடைய கதையை தான் ஆனந்தம் படமாக எடுத்ததாக ஒரு பேச்சும் உண்டு.  இதில்  2வது  அண்ணன் கேசவன் இன்று காலை மாரடைப்பினால் காலமானார்.  இவர்  கும்பகோணம் அருகே உள்ள குடவாசலில் திருப்பதி மளிகை கடை வைத்திருந்தார். சமீபகாலமாக சென்னையில் அண்ணனுடன் தங்கியிருந்தார்.  அத்துடன்  'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனத்தையும் சகோதரர்களுடன் சேர்ந்து கவனித்து வந்தார். இன்று காலை சென்னையில் காலமானதும்   அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.  அவரது இறுதி சடங்கு இன்று மாலை குடந்தை மாதுளம்பேட்டை  அவரது சகோதரர் இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

லிங்குசாமி
மறைந்த கேசவனின் மகன் வினோத், 'கோலி சோடா 2' படத்தில்  நடித்துள்ளார்.  லிங்குசாமி தயாரிப்பில் வெளியான   'நான் தான் சிவா'  படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விரைவில் அந்த படம் ரிலீசாக உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு லிங்குசாமி குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலக நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

From around the web