கமல் பாடல்... ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ்... ஹீரோவானார் லோகேஷ் கனகராஜ்!இன்று வெளியாகிறது ‘இனிமேல்’ பாடல்!

 
இனிமேல்

கமல் பாடல் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் என குஷி மூடில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஹீரோவாக அவதாரமெடுத்து இருக்கிறார். இன்று ‘இனிமேல்’ ஆல்பம் மாலை வெளியாகிறது.

மாநகரம் படம் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது ரஜினிகாந்தை இயக்கும் அளவிற்கு கோலிவுட்டில் முன்னேற்றம் கண்டுள்ளார், இடையில் கார்த்தி, விஜய், கமல்ஹாசன் ஆகியோரை வைத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பான் இந்தியா இயக்குனராகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த வகையில் அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.  

 


 

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜூன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக  கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. 

லோகேஷ் கனகராஜ்

சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். சமீபத்தில் பாடல் குறித்தான டீசர் வெளியானது. இந்த டீசரில் லோகேஷ் - ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி தெறிக்க விடும் விதமாக இருப்பதாக இணையவாசிகள் தெரிவித்தனர். கமலையே மிஞ்சும் விதமாக அவரது மகள் ஸ்ருதியிடம் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் என அவரது நடிப்பு அவதாரத்தை பலர் புகழ்ந்தனர்.

இந்நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் ‘இது மீண்டும் காதலிக்க வேண்டிய நேரம்’ என்றும் பதிவிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web