இயக்குநர் ஷங்கர் மகளுக்கு 2வது திருமணம்... முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் அழைப்பு!

 
ஷங்கர்

இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கெனவே கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. தற்போது, இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

கடந்த மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், ஐஸ்வர்யா - தருண் கார்த்திகேயன் திருமணத்திற்காக முதல்வர் ஸ்டாலினை மனைவியுடன் நேரில் சந்தித்து இயக்குநர் ஷங்கர் பத்திரிக்கை கொடுத்து, அழைப்பு விடுத்துள்ளார்.

ஷங்கர் மகள் ஐஸ்வர்யா

ஷங்கர் மகளின் முதல் கணவர் ரோஹித், பாலியல் சர்ச்சைகளில் சிக்கி, போக்சோ வழக்கில் உள்ளார். அதன் பின்னர், அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், 2வது திருமணம் செய்து கொள்கிறார் ஐஸ்வர்யா. இந்தியன் 2, ‘கேம் சேஞ்சர்ஸ்’ போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் இயக்குநர் ஷங்கர், ஷூட்டிங் இடைவெளியில் மகளின் திருமண வேலைகளில் இறங்கி இருக்கிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web