இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் உடல் இன்று மாலை தகனம் - திரையுலகினர் நேரில் அஞ்சலி!

 
சிங்கீதம்

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமான புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவின் (95) இறுதிச்சடங்குகள் மற்றும் உடல் தகனம் இன்று மாலை வடபழனியில் உள்ள ஏவிஎம் மின் மயானத்தில் நடைபெற உள்ளது.

 சிங்கீதம் சீனிவாச ராவ்   இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்  கமல்ஹாசன்

மறைந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவின் உடல், பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னையில் உள்ள அவரது விருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சிங்கீதம் சீனிவாசராவ்

'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காம ராஜன்', 'மகளிர் மட்டும்' உள்ளிட்ட பல மாஸ்டர்பீஸ் வெற்றிப் படங்களை வழங்கித் இந்தியத் திரையுலகை வியக்கவைத்த அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.