துரை தயாநிதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்... தொண்டர்கள் உற்சாகம்!

 
துரை தயாநிதி
 

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது அழகிரி ஆதரவாளர்களிடையேயும், திமுக தொண்டர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல தொழிலதிபராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வந்த துரை தயாநிதி, கடந்த டிசம்பர் மாதம் திடீரென உடல் நலம்  பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

துரை தயாநிதி

அப்பல்லோ மருத்துவமனையில் துரை தயாநிதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 

அதன் பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த துரைதயாநி மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

துரை தயாநிதி

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை இரண்டு முறை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துவிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

From around the web