ஊரப்பாக்கத்தில் மதுபோதையில் தகராறு… சக தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது!
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளியை உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (38). இவர் ஊரப்பாக்கத்தில் உள்ள சென்ட்ரிங் கடையில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கடையில் சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் (34) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு கடைக்குத் திரும்பியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து முனிராஜின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முனிராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லட்சுமணனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
