மதுபோதையில் தகராறு... போக்குவரத்து போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

 
மதுபோதையில் காவலர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ்குமார் என்பவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மானவி தற்கொலை

அப்போதைய சூழலில் அங்குச் செயல்பட்ட போக்குவரத்து காவலர் சைலேஷ்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், சைலேஷ்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படும் போக்குவரத்து காவலர் ஞானமூர்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.