நோன்பு கஞ்சி காய்ச்சுவதில் தகராறு.. பள்ளவாசலில் மோதிக்கொண்ட இரு பிரிவினர்.. 5 பேர் படுகாயம்!

 
பள்ளிவாசலில் மோதல்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி - நாகர்கோவில் சாலையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் இன்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அப்போது நோன்பு கஞ்சி யார் காய்ச்சுவது என இரு பிரிவினருக்கும் இடையே திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இரு பிரிவினரும் மாறி மாறி சுத்தியல் மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.

இதில் முகைதீன் பாபு (வயது 40), ஜெய்து அலி (வயது 47), சஜித் (வயது 28), சஜித் (வயது 24), யாசிர் (வயது 38) ஆகிய 5 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த 5 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த மோதல் குறித்து கன்னியாகுமரி போலீசார் இரு பிரிவினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோதலில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web