சபரிமலைக்கு மாலை அணிவதில் தகராறு... இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை - பெற்றோர் சாலை மறியல்!

 
இளம்பெண் கொலை தற்கொலை

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சங்கீதா (26) என்ற இளம்பெண், சபரிமலைக்கு மாலை அணிவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் வியாசர்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சபரிமலை

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் சங்கீதா (26) தம்பதிக்குத் திருமணமாகி 6 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. சபரிமலைக்கு மாலை அணிவது தொடர்பாகச் சந்தோஷ், சங்கீதாவிடம் பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பிரச்சினை உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சந்தோஷ் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் இருந்த சங்கீதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சபரிமலை

இது குறித்த தகவலறிந்து வந்த சங்கீதாவின் பெற்றோர், தங்கள் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நேற்று வியாசர்பாடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சங்கீதாவின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் மற்றும் பெற்றோர் முன்வைத்த சந்தேகம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.