கிழிந்த ரூ.10 நோட்டால் தகராறு... வாடிக்கையாளர் தாக்கியதால் டெலிவரி ஊழியர் தற்கொலை!

 
டெலிவரி தற்கொலை

டெல்லியில் கிழிந்த 10 ரூபாய் நோட்டை மாற்றித் தருமாறு கேட்ட ஃபிளிப்கார்ட் மினிட்ஸ் டெலிவரி ஊழியரை வாடிக்கையாளர் கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில், மனமுடைந்த இளைஞர் நஞ்சு அருந்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சமீர் ஹுசைன் (23) என்ற இளைஞர் 'ஃபிளிப்கார்ட் மினிட்ஸ்' நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி, ரூ.150 மதிப்பிலான காபியை விநியோகம் செய்ய வாடிக்கையாளரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வாடிக்கையாளர் கொடுத்த பணத்தில் ரூ.10 நோட்டு கிழிந்திருந்ததால், அதை மாற்றித் தருமாறு சமீர் ஹுசைன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர், சமீர் ஹுசைனைக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பள்ளி மானவி தற்கொலை

இச்சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சமீர் ஹுசைன், தனது ஏழ்மை காரணமாகவே தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்றைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பின்னர் கடுமையான மன அழுத்தத்தில் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்ற அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 20-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், டெலிவரி ஊழியரைத் தாக்கிய வாடிக்கையாளர் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எளிய டெலிவரி ஊழியரின் இந்தத் துயர முடிவு இணையத்தில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.