தந்தையுடன் அதிருப்தி... தனுஷ் தொடங்கும் புதிய கட்சியில் சேர ராமதாஸ் மகள் திட்டம்!

 
தனுஷ் காந்திமதி ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அவரது மகளான காந்திமதி, நடிகர் தனுஷ் விரைவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் புதிய அரசியல் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பாமகவில் மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே தீவிரமான கருத்து வேறுபாடு மற்றும் அரசியல் மோதல் நிலவி வந்தது. அந்தச் சமயத்தில் ராமதாஸ் தனது மகள் காந்திமதியை முன்னிறுத்தி, அவரைப் பாமகவின் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தி வந்தார்.

காந்திமதி

தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர் ராமதாஸ் தனது அரசியல் ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் பாமகவில் தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு கேள்விக்குறியானதால் காந்திமதி பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பாமகவிலிருந்து விலகி, நடிகர் தனுஷ் புதிதாகத் தொடங்கவுள்ள அரசியல் கட்சியில் இணைய காந்திமதி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, நடிகர் தனுஷை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அவர் நேரம் கேட்டு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.