இடைத்தேர்தலில் பெண்களுக்கு ரூ.200-க்கான டோக்கன் விநியோகம்.. அடுத்தடுத்து சர்ச்சை!

 
இடைத்தேர்தல் டோக்கன்

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள தாராபுரம் தொகுதியில், திமுகவினர் சார்பில் பரப்புரைக்கு வரும் பெண்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்காக டோக்கன்கள் விநியோகிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் திமுக தரப்பு பரப்புரை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரப்படும் பெண்களுக்கு, தலா ரூ.200 வழங்குவதற்காக இரண்டு வெவ்வேறு நிறங்களில் டோக்கன்கள் வழங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாராபுரம் இடைத்தேர்தல்

தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் முடிந்த பிறகு, இந்த டோக்கன்களைப் பெற்றுக் கொண்டு பெண்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி. சத்தியபாமாவை ஆதரித்து, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் இன்று தீவிரப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் சூழலில், இந்தப் புகார் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.