கள்ளக்காதலுக்கு இடையூறு... 9 வயது மகளைக் கொறு நாடகமாடிய தாய்!

 
கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப் கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 9 வயது சொந்த மகளையே தாய் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிஷாந்தினி (26). இவருக்குக் கீர்த்திஷா (9) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில், நிஷாந்தினிக்கு வேறொரு நபருடன் தவறான பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதல் விவகாரத்திற்கு 9 வயது மகள் கீர்த்திஷா பெரும் இடையூறாக இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் மகளை ஒழித்துக் கட்டத் திட்டமிட்ட நிஷாந்தினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி கீர்த்திஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கள்ளக்காதல்

மகள் உயிரிழந்ததை உறுதி செய்த பின், இக்கொடூரக் கொலையில் இருந்து தப்பிக்க நிஷாந்தினி ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தனது மகள் திடீரெனப் பேச்சு மூச்சின்றி மயங்கிக் கிடப்பதாக அருகில் இருந்தவர்களிடம் கூறி, சிறுமியை உடனடியாக காரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்குச் சிறுமியைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். மேலும், சிறுமியின் கழுத்துப் பகுதியில் இருந்த காயங்களைப் பார்த்துச் சந்தேகமடைந்த மருத்துவர்கள், இதுகுறித்து உடனடியாகப் பாடாலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

மருத்துவமனையின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாடாலூர் போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தாய் நிஷாந்தினியிடம் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த அவர், இறுதியில் தனது கள்ளக்காதலுக்காக மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, பெற்ற மகளையே கொலை செய்த தாய் நிஷாந்தினியைப் பாடாலூர் போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்துக் கைது செய்தனர்.