திருமண முறிவு, கள்ளத்தொடர்பு சர்ச்சை.. மௌனம் கலைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஷ் கார்ட்னர்!

 
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனை ஆஷ் கார்ட்னர்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் (Ashleigh Gardner), தனது திருமண முறிவு மற்றும் அது தொடர்பான சர்ச்சைகள் குறித்து முதன்முறையாக வாய் திறந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும் துணை கேப்டனுமான ஆஷ்லீ கார்ட்னர், மோனிகா ரைட் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்தனர். இதன் தொடர்ச்சியாக, கார்ட்னருக்குச் சக வீராங்கனை ஜார்ஜியாவுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோனிகா பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்தச் சர்ச்சை குறித்துப் பேசிய ஆஷ் கார்ட்னர், "மனைவி மோனிகாவைப் பிரிந்ததும், அது தொடர்பாக எழும் கள்ளத்தொடர்பு சர்ச்சைகளும் முற்றிலும் எனது தனிப்பட்ட விவகாரம்" என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும், இந்தச் சூழலில் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கோரிய அவர், தனது தனிப்பட்ட பிரச்சினையைக் கடந்து தன்னைத் தொடர்ந்து துணை கேப்டன் பதவியில் நீடிக்க ஆதரவளித்த 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.