விவாகரத்து கேட்டதால் விபரீதம்... காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன் - கர்நாடகத்தில் பயங்கரம்!

 
கொலை விவாகரத்து

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில், விவாகரத்து கேட்டுக் கோர்ட்டை நாடிய காதல் மனைவியை வழியிலேயே அழைத்துச் சென்று கணவரே கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி மாவட்டம் பைலஹொங்கலா தாலுக்கா அமத்தூரு கிராமத்தைச் சேர்ந்த ராஜு மடமகேரி என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி மடமகேரி (31) என்பவரும் காதலித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

பள்ளி மானவி தற்கொலை

கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே குடும்பத் தகராறும் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி லட்சுமி பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று லட்சுமி பணிபுரியும் இடத்திற்குச் சென்ற ராஜு, அவரை வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அமத்தூரு பகுதிக்கு அருகில் வைத்து, தான் மறைத்து வைத்திருந்த கல்ல மற்றும் தடியால் லட்சுமியைத் தாக்கிச் சம்பவ இடத்திலேயே கொன்றுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த பைலஹொங்கலா காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கணவர் ராஜுவைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.