தீபாவளிக்கு ஊருக்குச் செல்ல முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, தெற்கு ரயில்வே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் – திருச்சி மற்றும் தாம்பரம் – மானாமதுரை இடையே இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை எழும்பூர் – திருச்சி: ரயில் எண் 06191 நவம்பர் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியைச் சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரம் – மானாமதுரை: ரயில் எண் 06161 நவம்பர் 6-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரையைச் சென்றடையும். இதன் மறுமார்க்க ரயில் (06162) நவம்பர் 7-ம் தேதி காலை 6.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 3.45 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.
மேலும், நவம்பர் 7-ம் தேதி தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கும், நவம்பர் 9-ம் தேதி மானாமதுரையில் இருந்து தாம்பரத்திற்கும் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் 12 பெட்டிகளுடன் இயக்கப்படும்.
