தீபாவளி கொண்டாட்டம்... டாஸ்மாக் கடைகளில் காலையிலேயே குவிந்த மதுப்பிரியர்கள் Celebration!

 
டாஸ்மாக்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகையை ஒட்டிய தொடர் விடுமுறையைக் கருத்தில் கொண்டு, பலர் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கும் நிலையில், முன்கூட்டியே பல இடங்களில் மதுபானங்களை வாங்கி சென்றனர். 

பீர்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. தீபாவளி நாளான இன்று பலரும் அதிகாலையிலேயே எழுந்து வீட்டில் அசைவம் சமைத்து, வழிபாடுகள் நடத்திக் கொண்டாடி வரும் நிலையில், காலையிலேயே மது பிரியர்கள் சியர்ஸ் சொல்லி தீபாவளிக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். 

டாஸ்மாக் மதுபாட்டில் பாட்டில்

கடந்த சில நாட்களாக டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டத்தால் பல கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடைகள் மீண்டும் வழக்கமான செயல்பாட்டுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கூட்டம் கடை திறப்பதற்கு முன்னதாகவே அதிகரிக்க துவங்கிவிட்டது.