தீபாவளி தொடர் விடுமுறை... டாஸ்மாக்கில் விற்பனை ரூ.630 கோடியைத் தாண்டியது!

 
டாஸ்மாக்

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடிய வேளையில், அரசு மதுபான விற்பனைக் கழகமான டாஸ்மாக் கடைகளில் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகிப் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளில் மதுபானக் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. தீபாவளிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ரூ.234.75 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. தீபாவளி பண்டிகை தினமான சனிக்கிழமை அன்று ரூ.206.63 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இவ்விரு நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.441.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வசூல் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்

மாநில அளவில் நடைபெற்ற மது விற்பனையில், தலைநகர் சென்னையைப் பின்தள்ளி திருச்சி மண்டலம் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

திருச்சி மண்டலம்: ரூ.98.97 கோடி (முதலிடம்). சென்னை மண்டலம்: ரூ.95.85 கோடி (இரண்டாமிடம்). மதுரை மண்டலம்: ரூ.88.38 கோடி. சேலம் மண்டலம்: ரூ.87.52 கோடி. கோயம்புத்தூர் மண்டலம்: ரூ.70.66 கோடி

டாஸ்மாக்

தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து திங்கள்கிழமையும் (நவம்பர் 9) அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்பட்டதால், அன்றைய தினமும் சுமார் ரூ.192 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்றிருக்கக்கூடும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டுத் தீபாவளித் தொடர் விடுமுறையின் ஒட்டுமொத்த மது விற்பனை ரூ.630 கோடியைத் தாண்டும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.