யுனெஸ்கோ பட்டியலில் தீபாவளி… உலக மேடையில் ஒளிரும் இந்தியா மோடி பெருமிதம்!

 
மோடி
 

யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற யுனெஸ்கோ கூட்டத்தில், இந்த அறிவிப்பை மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்தியாவின் பாரம்பரிய திருவிழை ஒன்றுக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

இதனை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டார். தீபாவளி இந்தியர்களின் வாழ்வியலும் கலாச்சாரமும் இணைந்த விழா என அவர் குறிப்பிட்டார். வெளிச்சம், நீதி, நம்பிக்கை ஆகியவற்றை எடுத்துரைக்கும் நாகரிகத்தின் ஆன்மா தீபாவளி என்றும் தெரிவித்தார்.

யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெறுவதால் தீபாவளியின் உலகளாவிய புகழ் மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் மனிதகுலத்தை வழிநடத்தட்டும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டார். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இந்த அறிவிப்பை பெருமையுடன் கொண்டாடி வருகின்றனர்.