வாங்கி 2 நாள் தான் ஆச்சு... தீபாவளி பூஜையில் எரிந்துபோன வாஷிங் மெஷின்... வைரல் வீடியோ!

 
வாஷிங் மெஷின்

 

தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டில் மகிழ்ச்சியுடன் பூஜை செய்த குடும்பத்துக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தந்தேராஸ் பண்டிகையின்போது புதிதாக வாங்கிய வாஷிங் மெஷின், இரண்டு நாட்களிலேயே தீப்பற்றி எரிந்து நாசமான சம்பவம் கவனத்தைப் பெற்றுள்ளது.

தந்தேராஸ் பண்டிகையன்று அந்தக் குடும்பத்தினர் புதிய வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கியுள்ளனர். இதையடுத்து, தீபாவளி தினத்தன்று வீட்டில் சிறப்பு பூஜை செய்தபோது, புதிதாக வாங்கிய இயந்திரத்தின் மீது விளக்கை ஏற்றி வைத்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக விளக்கில் இருந்து தீ பரவி வாஷிங் மெஷின் தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் இயந்திரம் முழுவதும் தீக்கிரையாகி, பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசையுடன் வாங்கிய புதிய மின்சாதனம், பூஜையின்போது ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.வீட்டில் பூஜை செய்யும்போது எரியும் விளக்குகளை மின்சாதனங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களின் மீது வைக்காமல் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.