இன்று முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்... அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள்!

 
பேருந்து

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று (நவம்பர் 5) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் நவம்பர் 5 முதல் 7-ந்தேதி வரை மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளும் அடங்கும்.

பேருந்து

தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக நவம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் 11,197 பேருந்துகள் இயக்கவும் போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையே, பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக பணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகார் அளிக்கலாம்.

கிளாம்பாக்கம் விடுமுறை பேருந்து சிறப்பு நிலையம் கூட்டம் வெளியூர்

பயணிகள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், போக்குவரத்துத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800 425 6151-ஐ தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம்.அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது