தீபாவளிக்கு சென்னையிலிருந்து 2 சிறப்பு ரயில்கள்... நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு!

 
தீபாவளி ரயில்

 

தீபாவளிக்கு சென்னையிலிருந்து 2 சிறப்பு ரயில்கள்! நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரல்–போத்தனூர், தாம்பரம்–நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை (அக்டோபர் 29) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

எக்ஸ்பிரஸ் ரயில்

சென்னை சென்ட்ரல் – போத்தனூர் சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 6-ம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 06023, மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், நவம்பர் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்குப் போத்தனூரில் இருந்து புறப்படும் ரயில் எண் 06024, மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

ரயில் தண்டவாளம்

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து நவம்பர் 6-ம் தேதி இரவு 11.55 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 06153, நவம்பர் 7-ம் தேதி மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.

நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 9-ம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்படும் ரயில் எண் 06154, மறுநாள் காலை 11.30 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

பண்டிகைக் காலப் பயணத்தைத் திட்டமிடும் பயணிகள், முன்பதிவு தொடங்கும் நேரத்தைக் கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.