தீபாவளி பண்டிகை ரயில் முன்பதிவு தேதி விவரங்கள் வெளியீடு!

 
தீபாவளி ரயில்

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ரயில்களில் பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன்னதாகத் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், தீபாவளிக்குச் சொந்த ஊர் செல்வோருக்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

தீபாவளி

நவம்பர் 5 (வியாழன்) பயணம்: செப்டம்பர் 6 (ஞாயிறு) அன்று முன்பதிவு செய்யலாம்.

நவம்பர் 6 (வெள்ளி) பயணம்: செப்டம்பர் 7 (திங்கள்) அன்று முன்பதிவு செய்யலாம்.

நவம்பர் 7 (சனி) பயணம்: செப்டம்பர் 8 (செவ்வாய்) அன்று முன்பதிவு செய்யலாம்.

நவம்பர் 8 (தீபாவளி நாள்) பயணம்: செப்டம்பர் 9 (புதன்) அன்று முன்பதிவு செய்யலாம்.

தீபாவளி

தீபாவளி முடிந்து ஊரிலிருந்து திரும்ப, நவம்பர் 9-ஆம் தேதி பயணத்திற்குச் செப்டம்பர் 10-ஆம் தேதியும், நவம்பர் 11-ஆம் தேதி பயணத்திற்குச் செப்டம்பர் 11-ஆம் தேதியும் முன்பதிவு செய்ய இயலும்.

ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. பண்டிகை காலம் என்பதால் முக்கிய ரயில்களில் சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப வாய்ப்புள்ளதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.