தூத்துக்குடி வரை செல்லும் தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது!

 
ரயில் பட்டாசு
 

தீபாவளியை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், தூத்துக்குடியில் இருந்து இன்று அக்டோபர் 29ம் தேதி , நவ.4ல் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06188) மறுநாள் காலை 10.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

ரயில்

தாம்பரத்தில் இருந்து அக்.30, நவ.5- ஆகிய தேதிகளில் பகல் 12.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 9 பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ரயில்

இந்த ரயில், தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இந்த நிலையில், தூத்துக்குடி-தாம்பரம் தீபாவளி  சிறப்பு ரயில்கள் முன்பதிவு துவங்கியுள்ளது.

From around the web