மே 31ல் பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

 
பிரேமலதா பிரேமலதா

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.இது தொடர்பாகத் தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் மே 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு  சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழக வளாகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரேமலதா

கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இந்த முக்கியக் கூட்டத்தில், கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், தலைமை கழக நிர்வாகிகளும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட வாரியாகக் கட்சியின் கிளைக் கழகங்களை மறுசீரமைப்பு செய்தல் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளைத் தீவிரப்படுத்துதல், அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் புதிய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், தேமுதிகவின் எதிர்கால அரசியல் வியூகங்கள் மற்றும் மக்கள் நலப் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசித்தல் நடைபெற உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்

கூட்டத்தின் நிறைவில், தற்போதைய சமூகப் பிரச்சினைகள் மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.