திமுக, அதிமுகவுக்கு மெஜாரட்டி கிடைக்காது... ஆற்காடு பஞ்சாங்கத்தால் பரபரப்பு!

 
ஸ்டாலின் தேர்தல் தமிழகம் ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் வேளையில், பல்வேறு ஊடகங்கள் மற்றும் முகமைகள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பாலான கணிப்புகள் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் எனக் கூறி வரும் நிலையில், பராபவ ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கம் முற்றிலும் மாறுபட்ட ஒரு கணிப்பை முன்வைத்துள்ளது.

ஆற்காடு சீதாராமையர் பஞ்சாங்கத்தில், இந்த ஆண்டுக்கான உலகளாவிய மற்றும் உள்ளூர் அரசியல் மாற்றங்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசியல் பற்றி இடம்பெற்றுள்ள முக்கியக் குறிப்புகள் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாங்கம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், மக்கள் எதிர்பார்த்த அல்லது அரசியல் கட்சிகள் எதிர்பார்க்கும் அளவிலான பிரம்மாண்ட வெற்றி எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் கிடைக்காது.

தமிழகத்தில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வரும் ஒரு கட்சியின் 'தனிப்பெரும் ஆட்சி'  முடிவுக்கு வந்து, பல கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் கூட்டணி ஆட்சி  அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் எனப் பஞ்சாங்கம் கூறுகிறது. உலகளாவிய அரசியலிலும் பெரிய அளவிலான அதிகார மாற்றங்கள் இந்த ஆண்டு நிகழும் என அதில் கணிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி விஜய்

பொதுவாகத் தமிழகத்தில் தேர்தல் நேரங்களில் ஆற்காடு பஞ்சாங்கத்தின் கணிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்தக் கணிப்பு ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி என இருதரப்புத் தொண்டர்களிடையேயும் ஒருவிதக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"யாரும் எதிர்பார்க்காத வகையில் மூன்றாவது அணி அல்லது புதிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்குமா?" என்ற விவாதம் தற்போதே தொடங்கி விட்டது.

பஞ்சாங்கத்தின் கணிப்பு பலிக்குமா அல்லது பொய்யாகுமா என்பது வாக்காளர்களின் கைகளில் தான் உள்ளது. தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்குமா என்பதை அறிய, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டும்.