தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யா முன்னிலை - வாக்கு எண்ணிக்கை நேரலை நிலவரங்கள்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் ஆரம்பகட்ட நிலவரப்படி, திமுக வேட்பாளர் சுகன்யா முன்னிலை பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் சத்யபாமா மற்றும் அதிமுக வேட்பாளர் பானுமதி ஆகியோரும் களத்தில் தீவிரப் போட்டியினை எதிர்கொண்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டுள்ள மரகதம் குமரவேல் ஆரம்பகட்ட வாக்குகளில் முன்னிலை வகித்து வருகிறார்.
இத்துடன் சேர்த்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் முன்னிலை பெற்றுள்ளார். சுற்றுவாரியான முழுமையான முடிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிலவரங்கள் விரைவில் வெளியாகும்.
