அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்குச் சட்டப்பேரவையில் திமுகவினர் கடும் கண்டனம்!
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியில் பட்டாசுத் தொழில் உரிமம் வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக அமைச்சர் கீர்த்தனா குற்றஞ்சாட்டியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, கடந்த முந்தைய ஆட்சிக்காலத்தில் பட்டாசுத் தொழில் உரிமங்கள் வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதற்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "உங்கள் ஆட்சியிலும் இதே போன்ற லஞ்சப் புகார்கள் கூறப்படுகின்றன; அதையெல்லாம் நீங்கள் ஏற்பீர்களா? எந்தவித ஆதாரமும் இல்லாமல் இப்படிப் பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய மூத்த தலைவர் எ.வ.வேலு, அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டி விவாதிப்பதை விட்டுவிட்டு, எதற்கெடுத்தாலும் முந்தைய ஆட்சியின் மீது ஊழல் முத்திரை குத்துவது ஏற்புடையதல்ல என்று தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
