நகராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் அட்டகாசம்.. பேனரை அகற்றியதால் வெறிச்செயல்!

 
முகமது அபுபக்கர் 

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி அரசியல் கட்சி விளம்பரங்களை தேர்தல் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட அலுவலக வளாகம் எதிரே உள்ள பேருந்து நிலையம் முன்பு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள், விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக 14வது வார்டு நகராட்சி கவுன்சிலரின் கணவர் முகமது அபுபக்கர் , நகராட்சி அலுவலகம் சென்று, படங்களை அகற்றுவது தொடர்பாக, நிர்வாகிகளை மற்றும் ஊழியர்களை மிரட்டி, தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. கதவை உதைத்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில், நாகை உப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலரின் கணவர் முகமது அபுபக்கர் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை மிரட்டியது தொடர்பான சி.சி.டி.வி. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web