திமுகவில் பதவியை இழக்கும் மாவட்டச் செயலாளர்கள்... சீனியர்களுக்கு கல்தா!

 
திமுக ஸ்டாலின்

திமுகவில் கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும் புதிய நிர்வாக விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்டச் செயலாளர் பதவியில் தொடர்ந்து 2 அல்லது 3 முறைக்கு மேல் நீடித்த நிர்வாகிகளுக்குப் புதிய வாய்ப்பு மறுக்கப்பட்டு, பதவிகள் மாற்றப்பட உள்ளன.

பெரிய கருப்பன்

கட்சிப் பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 70 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகள் பலருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.

3 முறை பதவி அடிப்படையில்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரியகருப்பன், மூர்த்தி, தா.மோ. அன்பரசன் உள்ளிட்ட கட்சியின் முன்னணி முகங்கள் தங்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளை இழக்க நேரிடும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின் உதயநிதிஸ்டாலின்

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வயது வரம்பு நிபந்தனைகளின்படி எ.வ.வேலு, ரகுபதி உள்ளிட்ட 13 மூத்த நிர்வாகிகள் தங்களது மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கட்சியின் கீழ்மட்ட அமைப்புகள் வரை புனரமைத்து, இளம் தலைமுறைக்கு வழிவிடும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.