மே 3ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு தென் மாவட்ட அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புக்கள் தரப்பட்டுள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மே 3ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மே 03-05-2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும்.
அந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!