அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு எதிராக திமுக உரிமை மீறல் கடிதம்!

 
நிர்மல் குமார்

சட்டப்பேரவையில் மிசா சட்டம் குறித்தும் அவையில் இல்லாத தலைவர்கள் குறித்தும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பேசியதாகக் கூறி, சட்ட அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு எதிராகத் திமுக கொறடா எ.வ.வேலு சபாநாயகரிடம் உரிமை மீறல் கடிதத்தை வழங்கியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து, திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இந்தக் கடிதத்தைக் அளித்தனர்.

உதயநிதி நிர்மல் உதய்நிர்மல்

கடிதத்தை அளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, சட்டமன்ற விதிமுறைகளின்படி அவையில் இல்லாதவர்களைப் பற்றிப் பேசக்கூடாது என்றும், ஆனால் அமைச்சர் நிர்மல்குமார் தொடர்ந்து அவையில் இல்லாதவர்களைப் பற்றியே பேசி திசைதிருப்பும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டுப் போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதனைக் கவனிக்காமல் முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை அவதூறாகப் பேசுவதுடன், உண்மைக்கு மாறான கருத்துகளை அமைச்சர் பேசி வருவதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து பொய் பேசி வருவதாகக் கண்டித்து இந்த உரிமை மீறல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.