அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
எதிர்க்கட்சித் தலைவர் குறித்து பொதுவெளியில் அவதூறான மற்றும் முகம்சுளிக்கும் வகையிலான கருத்துகளைத் தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் மனு அளித்துள்ளார்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சித் தலைவரை இலக்காகக் கொண்டு தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அவதூறு கருத்துகளையும் பொதுவெளியில் பேசி வருவதாக திமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற தரமற்ற மற்றும் அடிப்படையற்றப் பேச்சுக்கள் மூலம் தேர்தல் களம் நேர்மையாக நடைபெறுவது கேள்விக்குள்ளாக்கப்படுவதாகவும், பொதுமக்களும் முகம்சுளிக்கும் சூழல் உருவாக்கப்படுவதாகவும் மனுவில் கடுமையாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் களம் அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், ஆதவ் அர்ஜுனாவின் இத்தகைய செயல்கள் மீது தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று திமுக சட்டத்துறைச் செயலாளர் தனது மனுவில் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.
