திமுக அரசு ஜெம் வீரமணி விவகாரத்தில் ரூ.500 கோடி பறிப்பு - அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

 
வீரமணி நிர்மல்குமார்

ஜெம் வீரமணி விவகாரத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்ட போதிலும், திமுக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்காதது ஏன் என்று சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கிரானைட் வீரமணி

ஜெம் வீரமணி மீதான முறைகேடுகள் குறித்து உளவுத்துறை தரப்பில் உரிய தகவல்கள் அளிக்கப்பட்ட போதிலும், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருந்தார் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையாகச் சாடினார்.

ஜெம் வீரமணியிடம் ரகசியமாகப் பேரம் பேசப்பட்டு, திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 500 கோடி ரூபாய் வரை பணம் பறிக்கப்பட்டதாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான புகார்கள் எழுந்துள்ளதாக அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

ஜெம் வீரமணி

உரிய ஆதாரங்கள் இருந்தும் ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்தது ஏன் எனவும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.