‘பாலு’ அண்ணா ரசிகர்களில் ஒருவனாக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி’ - கமல்ஹாசன் உருக்கம்!
பிரபல பின்னணி பாடகர், பாடும் நிலா பாலு நினைவாக அவர் வசித்து வந்த வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்டக் கோரி, அவரது மகனும், பிரபல தயாரிப்பாளர், பாடகர் எஸ்.பி.பி.சரண் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், நேற்று நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம்' சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ என பெயர் சூட்டியுள்ளதகாக நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் அதில், “ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள். லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உரித்தாகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!