திமுக கனிமொழியின் கணவர் மருத்துவமனையில் அனுமதி.. சிங்கப்பூர் பறந்தார் !!

 
கனிமொழி

திமுக எம்.பியும், மகளிரணி செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்பியாக இருப்பவர் கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அரவிந்தனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

கனிமொழி

கணவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அருகில் இருந்து கணவரை கவனித்து வருகிறார். தற்போது அரவிந்தனின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

கனிமொழி

அவரது உடல்நிலை குறித்து கனிமொழியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. திமுக எம்பி கனிமொழியின் கணவர் உடல்நிலை குறித்த தகவல் பரவியதும் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அவரது உடல்நிலை சிராக உள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

From around the web