ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - சிக்கலில் திமுக நிர்வாகி!

 
ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு, மைசூர்பாகுக்கு பதில் வெண்பொங்கல், புளியோதரை!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலத்தில் திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறப்படும் சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு திமுக கட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஸ்ரீரங்கம்

இந்த விவகாரத்தில் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் பெயர் அடிபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலம் யாருடையது, அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தச் சர்ச்சையின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஆவணங்களுடன் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.