நடனப் பெண்களை உல்லாசத்திற்கு அனுப்பிய திமுக பிரமுகர்.. மறுத்தால் அவ்வளவு தான்.. பகீர் பின்னணி!

 
மதி

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரின் மகள் நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 21, கடந்த ஐந்து ஆண்டுகளாக மேடை நடனக் கலைஞராக உள்ளார். நடனமாடுவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வது வழக்கம். ஆறு மாதங்களுக்கு முன், கரூர் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த தி.மு.க.,வைச் சேர்ந்த மதி என்பவர், நந்தினியை, தன் நடனக் குழுவுக்கு அழைத்து வந்தார்.

கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஊரிப்பேட்டையில் திமுகவைச் சேர்ந்த மதி என்பவருக்கு அலுவலகம் மற்றும் வீடு உள்ளது. கரூரில் இருந்து வந்த நந்தினி, மதியிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலேஸ் என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது மதிக்கு பிடிக்கவில்ல்லை. இதன் காரணமாக நந்தினி, நிலேஷ் இருவரும் வேறு மாவட்டத்திற்குச் சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 17ம் தேதி அங்கு வந்த மதி, நந்தினியிடம் அன்பாக பேசி, மீண்டும் கணவன், மனைவி இருவரையும் கரூர் அழைத்து வந்தார். கரூர் வந்த பிறகு கணவன், மனைவி இருவரையும் வெவ்வேறு இடங்களில் அடைத்து வைத்து தனித்தனியாக இதுவரை சித்ரவதை செய்துள்ளனர்.மேலும், நந்தினி நகைகளை திருடி தனி இடத்தில் வைத்து பூட்டி, ஆடைகளை கழட்டி நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மதி மற்றும் அவருடன் இருந்த சிலர் நந்தினியை சொல்ல முடியாத அளவுக்கு அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதையடுத்து மதியை மூன்று நாட்களாக தனி அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்தனர். மேலும், கர்ப்பமாக இருந்த நந்தினி, வயிற்றில் உதைக்கப்பட்டதால் கரு கலைக்கப்பட்ட நிலையில், ரத்தப்போக்கு ஏற்பட்டு சுயநினைவற்ற நிலையில் கிடந்தார்.

அங்கிருந்த மற்றொரு பெண் நடனக் கலைஞர், இதைத் தாங்க முடியாமல், நந்தினியின் தாயாரை ரகசியமாகத் தொடர்பு கொண்டு, மகளை இங்கேயே அடித்துக் கொன்று விடுவார்கள் என்பதால், மகளை அழைத்துச் செல்லும்படி கூறினார். இதுகுறித்து நந்தினியின் தாயார் தனலட்சுமி கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து உயா பேட்டையில் உள்ள மதி டான்சர்ஸ் பயிற்சி இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நந்தினி மற்றும் அவரது கணவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நந்தினி கூறுகையில், “காதலித்து திருமணம் செய்தது நடனக் குழு தலைவருக்கு பிடிக்கவில்லை.  அவர் சொன்ன எல்லா இடங்களுக்கும் நான் போக வேண்டும் என்று விரும்பினார். நான் மறுத்ததால், அவர் வீட்டில் நகைகளை திருடியதாக குற்றம் சாட்டி என்னை சித்ரவதை செய்தார். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.

என்னைப் போல பல பெண்களை நடனமாட அழைத்து வந்து அறைகளில் அடைத்து சித்ரவதை செய்கிறார். அவரை கைது செய்து பெண்களை மீட்க வேண்டும். “எனக்கு ஏற்பட்ட மாதிரி இந்த நிலை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. இதுகுறித்து நந்தினியின் உறவினர்கள் கூறுகையில், ''சொந்த காரில் திமுக கொடியை கட்டி வைத்துவிட்டு, திமுக பொறுப்பில் இருப்பதாகவும், பெரிய திமுக பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பதாகவும், கட்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், நடனமாடும் சிறுமிகளை அனுப்புவது போன்ற செயல்களை மதி செய்து வருகிறார்.

இதுகுறித்து டான்ஸ் மாஸ்டர் மதி, பிரவீன், ப்ரீத்தி ஆகியோர் மீது பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது கட்சிக்காரர்களுக்கு நடனமாடும் பெண்களை உல்லாசத்திற்கு அனுப்பி மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது  பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web