திமுக பிரமுகர், வியாபாரிகள் சங்க தலைவர் மகன் பைக் விபத்தில் மரணம்... போலீசார் விசாரணை!

 
பைக்

சென்னையில் பைக் விபத்திற்குள்ளானதில் திமுக பிரமுகரும், வியாபாரிகள் சங்கத் தலைவருமான முத்து என்பவரின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னை ஆலந்தூர் பரங்கிமலை பகுதியில் கரையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவர் அந்த பகுதியின் வியாபாரிகள் சங்கத் தலைவராகவும், திமுக மாவட்ட பிரதிநிதியாகவும் பதவி வகித்து வருகிறார்.

விபத்து

இந்நிலையில் இவரது மூத்த மகன் கதிரவன் (34) கடந்த ஜனவரி 15ம் தேதி நள்ளிரவு மணப்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவரது பைக் நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கதிரவன் படுகாயமடைந்தார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த கதிரவனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிரன், அங்கு சிகிச்சைச் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web