திமுக எம்எல்ஏவின் சகோதரர் காலமானார் - கனிமொழி எம்.பி. இரங்கல்!

 
வாசுதேவநல்லூர் திமுக எம்.எல்.ஏ

தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான இ.ராஜாவின் சகோதரரும், தென்காசி 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான இ.பாலமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

உள்ளாட்சி அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த இ.பாலமுருகன் மறைவு அப்பகுதி திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இ.பாலமுருகன் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.