கோவையில் 3 தளங்களுடன் பிரம்மாண்டக திமுக அலுவலகம்... இன்று மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்!

 
கோவை திமுக அலுவலகம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொண்டு புதிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவையில் நடைபெறவுள்ள தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மற்றும் தனக்கான பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.

கோவை நீலாம்பூரில் அமையவுள்ள பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலகத்திற்கு இன்று காலை 11 மணியளவில் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். புதிய மாவட்ட அலுவலகம் நவீன வசதிகளுடன் மொத்தம் 3 தளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான அமைப்பாகக் கட்டப்படவுள்ளது.

கட்டடத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான கூட்ட அரங்கம், சுப நிகழ்ச்சிகள் நடத்த திருமண மண்டபம் மற்றும் விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல முக்கிய வசதிகள் இடம்பெறுகின்றன.

கோவை மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாராட்டு விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.