"பெரியாரின் புரட்சியால் தலைநிமிர்ந்த தமிழினம்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

 
பெரியார்

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்கு புரட்சி வணக்கம்" எனத் தெரிவித்துள்ளார்.

பல தலைமுறைகளாகச் சமூக ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைகளுக்கும் பணிந்து கிடந்த நிலை மாறி, பெரியாரின் இடைவிடாத புரட்சியால்தான் சமூகம் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

க்ட்க்

தந்தை பெரியார் எதிர்த்த ஆதிக்க மனப்பான்மையும் ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் முற்றிலுமாக அகன்றுவிடாத சூழல் நிலவுவதாகக் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அந்த ஆதிக்கச் சிந்தனைகளை அடையாளம் கண்டு அவற்றை வேரறுத்து முறியடிப்பது வரும் தலைமுறைகளின் முக்கியக் கடமையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.