தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
Oct 9, 2026, 19:10 IST
தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.
சாதி ஒழிப்பிற்காகவும் அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடிட ஆணை பிறப்பித்ததும், அவருக்கு மணிமண்டபம் அமைத்து நினைவைப் போற்றியதும் நமது திராவிட மாடல் அரசு என்பதை அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் சாதிய ஒடுக்குமுறை ஆகிய இரண்டையும் எதிர்த்துப் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் வழியில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்ட உழைப்போம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
