இன்று தவெக அரசைக் கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: சிவகாசியில் பரபரப்பு!

 
திமுக ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசுத் தொழிலை முடக்கும் வகையில் தவெக அரசு செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டி, திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தங்கம் தென்னரசு

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பட்டாசு உற்பத்தியில் விதிக்கப்படும் இத்தகைய கெடுபிடிகள் சிவகாசியில் உள்ள லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என திமுக குற்றம் சாட்டியுள்ளது.

தங்கம் தென்னரசு

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கவும், அரசு மேற்கொண்டு வரும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.