தாராபுரம் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக.. மீண்டும் தவெக வேட்பாளர் முன்னிலை!

 
தாராபுரம்

தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

க்ட்க்

தாராபுரம் தொகுதி (8-வது சுற்று முடிவு): தவெக (சத்யபாமா) 21,034 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அதிமுக (பானுமதி) 19,730 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். திமுக (சுகன்யா) 17,898 வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பெற்றுள்ளது.

தாராபுரம்

மதுராந்தகம் தொகுதியில் தவெக (மரகதம் குமரவேல்) 27,185 வாக்குகள் பெற்று பலத்த முன்னிலையில் உள்ளார் (சுமார் 8,760 வாக்குகள் வித்தியாசம்). திமுக (பரந்தாமன்) 18,425 வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அதிமுக (கணிதா சம்பத்) 15,893 வாக்குகள் பெற்று இத்தொகுதியில் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கைகள் மிகச் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் தொடர்கின்றன.